மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிகவனம் பேணுதல் குறித்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
சிறப்புப் பயிற்சி
கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறையின், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் சார்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிகவனம் பேணுதல் குறித்து, கோவை மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை கல்வி மாவட்டம் சார்பில், ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமை முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் கீதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து கருத்தாளர் ஆனந்தி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார்.
பேரூர் கல்வி மாவட்டம்
இதேபோல், பேரூர் கல்வி மாவட்டம் சார்பில், குனியமுத்தூர் நேரு கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி முகாமை மாவட்ட கல்வி அலுவலர் சுப்புலட்சுமி, எஸ்எஸ் குளம் கல்வி மாவட்டம் சார்பில், சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமை மாவட்ட கல்வி அலுவலர் கீதா ஆகியோர் தொடங்கி வைத்து உரையாற்றினர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும் போது, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் சார்பில், தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு சார்ந்து இப்பயிற்சி அளிக்
கப்படுகிறது.
மாணவர்களின் ஆரோக்கியம்
பள்ளிகளின் உள்கட்டமைப்பு, மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், உளவியல், சமூக நோக்கம், ஆசிரியர்களின் பங்களித்தல் மற்றும் கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது' என்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர் கே.கண்ணன் செய்திருந்தார்.