நம்ம ஊரு நடப்பு

மேம்படுத்தப்பட்ட புதிய எமிஸ் இணையதளம் ஆசிரியர்கள் வரவேற்பு

செய்திப்பிரிவு

பள்ளிக் கல்வித் துறையின் மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணைய தளத்துக்கு ஆசிரியர்கள் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வியில் தொழில்நுட்பரீதியான வசதிகளை வழங்கும் விதமாக கல்வி மேலாண்மை தகவல் மையம் (எமிஸ்) இணையதளம் உருவாக்கப்பட்டது.

பள்ளிகளின் அங்கீகாரம், மாணவர், ஆசிரியர்கள் விவரம், வருகைப்பதிவு, உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுபவர் எண்ணிக்கை, மாற்றுச்சான்றிதழ், இடமாறுதல் கலந்தாய்வு உட்பட அனைத்து செயல்பாடுகளும் தற்போது ‘எமிஸ்’ இணைய தளம் வழியாகவே மேற்கொள்ளப்படு கின்றன.

இதற்கிடையே எமிஸ் இணைய தளத்தில் அவ்வப்போது குளறுபடிகள் ஏற்படுவதாகவும், சில நேரங்களில் முழுமையாக முடங்கிவிடுவதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் புகார்கள் கூறப்பட்டது.

இதையடுத்து எமிஸ் வசதிகளை சீர்செய்யும் பணிகளில் கல்வித்துறை ஈடுபட்டது. அரையாண்டு விடுமுறையில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு புத்தாண்டு முதல் மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளம் அமலுக்கு வந்துள்ளது.

இவற்றில் மாணவர்களின் வருகைப்பதிவு விவரங்களை வகுப்பு, பாடவாரியாக அறிதல், செல்போன் மற்றும் ஆதார் விவரங்களை மாற்றம் செய்தல், பள்ளிகளில் கழிவறை, குடிநீர் வசதிகளின் நிலைப்பாடு மற்றும் பள்ளிக்கு தேவையான கூடுதல் வசதிகளை பதிவு செய்தல் உட்பட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், எமிஸ் இணையதள வேகமும் முன்பைவிட அதிகமாக இருப்பதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT