கோப்புப்படம் 
நம்ம ஊரு நடப்பு

ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நிறைவு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் பாடம் நடத்த ஏதுவாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி
யிருப்பதாவது:

தமிழகத்தில் 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இதையடுத்து ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏதுவாக முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டவாரியாக கடந்த டிசம்பர் 19, 20-ம் தேதிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி ஜனவரி 6, 7-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

அதன்படி பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பணிவிடுப்பு செய்து அனுப்ப வேண்டும். ஆசிரியர்கள் பயிற்சி நாள் அன்று காலை 9.30 மணிக்குள் பயிற்சி மையத்துக்கு வந்துவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT