சேலியமேடு வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட சுரைக்காய் குடுவை குடில்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அடுத்த படம்: சுரைக்காய் குடுவையில் செய்யப்பட்டுள்ள குடில். 
நம்ம ஊரு நடப்பு

சுரைக்காய் குடுவைக்குள் கிறிஸ்துமஸ் குடில்: அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்

செய்திப்பிரிவு

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர் கள் சுரைக்காய் குடுவைக்குள் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து அசத்தியுள்ளனர்.

புதுச்சேரி சேலியமேடு கிராமத்தில் வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்குபயிலும் மாணவர்களுக்கு கல்வியு டன் கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பயிற்சியை கைவினை ஆசிரியர்உமாபதி அளித்து வருகிறார். கிராமப்புறங்களில் பயனற்று கிடக் கும் தேங்காய் குருமி, மட்டை, நார், ஓடு, பனை ஓலை போன்றவற்றை கொண்டு கலைநயமிக்க கைவினை பொருட்களை தயாரிக்கும் பயிற்சியை மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் உமாபதி அளிக் கிறார். மாணவர்கள் தயாரித்த கைவினை பொருட்களை கொண்டுபள்ளி வளாகத்தில் 'அழிவின்உயிர்ப்பு' என்ற தலைப்பில்காட்சியரங்கை உருவாக்கியுள் ளனர். இந்த காட்சியரங்கை சனி,ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்க ளில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு மகிழ்கின்றனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மாணவர் கள் பவித்திரன், ஷர்மா, நிரஞ்சன்,கிருஷ்ணன், கவுதம் ஆகி யோர் சுரைக்காய் குடுவைக்குள் குடில்களை உருவாக் கியுள்ளனர். மாணவர்களுக்கு கை வினை பயிற்சி அளிக்க புதுச்சேரி அரசின்கல்வித்துறை தொடர்ந்து ஊக்க மளிக்கிறது என்றும், இதன்மூலம் மாணவர்கள் சொந்த திறமை வெளிப்படுகிறது என்றும் ஆசிரியர் உமாபதி கூறினார்.

SCROLL FOR NEXT