நம்ம ஊரு நடப்பு

கோவையில் பள்ளி மாணவர்களுக்கு தடகளப் போட்டி

செய்திப்பிரிவு

கோவையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகளப்போட்டி,  நாராயணகுரு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 14, 17, 19 ஆகிய வயது பிரிவுகளில் சுமார் 900 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:மாணவர்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் லிங்கேஸ்வரன் முதலிடமும்,  வள்ளியப்பா வித்யா மெட்ரிக் பள்ளி மாணவர் அருண் இரண்டாமிடமும், நேஷனல் ஸ்போர்ட்ஸ் பள்ளி மாணவர் அஃப்சாரூதீன் மூன்றாமிடமும் பெற்ற னர்.

1500 மீ. ஓட்டப்பந்தயத்தில் என்.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவர் பிரதீப் ரோஷன் முதலிடத்தையும், காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மதன் இரண்டாமிடத்தையும், அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ஆல்வின் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

100 மீ. ஓட்டப்பந்தயத்தில்  வள்ளியப்பா வித்யா மெட்ரிக் பள்ளிமாணவர் மோகன்வேல் முதலிடத்தையும், முத்தலமாடா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஷெரீப் இரண்டா மிடத்தையும், கொல்லங்கோடு பி.எஸ்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர் சுஜித்சதீஷ் மூன்றாமிடத்தையும் கைப்பற்றினர்.

மாணவிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் சவறா வித்யாபவன் மெட்ரிக் பள்ளி மாணவி ஷைனி நிதிலா முதலிடத்தையும்,  அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நிவேதா இரண்டாமிடத்தையும், ஹர்ஷினி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

400 மீ. ஓட்டப்பந்தயத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தேவி முதலிடத்தையும்,  அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.சிந்து இரண்டாமிடத்தையும், மல்லையன் மெட்ரிக் பள்ளி மாணவி அழகானந்தா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

நீளம் தாண்டுதல் போட்டியில் அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அஸ்வினி முதலிடத்தையும், வைஷ்ணவி இரண்டா மிடத்தையும், விஷ்ணு பிரியா மூன்றாமிடத்தையும் கைப்பற்றினர்.

முன்னதாக, போட்டிகளை கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.பி.ரவிச்சந்திரன்,  நாராயணகுரு கல்வி நிறுவனங்களின் செயலர் பி.எம்.வாசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதல்வர் எம்.உதயகுமார், உடற்கல்வி இயக்குநர் பி.எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT