நம்ம ஊரு நடப்பு

தேசிய புகைப்பட விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: பத்திரிகை தகவல் அலுவலகம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் புகைப்படப் பிரிவு, 8-வது தேசிய புகைப்பட விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

நம் நாட்டின் கலை, கலாச்சாரம், வளர்ச்சி, பாரம்பரியம், வரலாறு, வாழ்க்கை முறை, மரபுகள் போன்றபல்வேறு துறைகள் பற்றி புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய புகைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. வாழ்நாள் சாதனையாளர் விருது, தொழில்முறை புகைப்படக் கலைஞர்களுக்கான விருது, தொழில்முறை அல்லாத புகைப்படக் கலைஞர்களுக்கான விருது என்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

ரூ.3 லட்சம் பரிசுவாழ்நாள் சாதனைக்கான விருது

ரூ.3 லட்சம், தொழில் முறை கலைஞர்களுக்கான விருது ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசைக் கொண்டது. மேலும் 5 சிறப்பு விருதுகள் வழங்கப்படும். இவை ஒவ்வொன்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையைக் கொண்டது. இப்பிரிவில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு இந்தஆண்டுக்கான கருப்பொருள் ‘வாழ்க்கையும், தண்ணீரும்’என்பதாகும்.

5 சிறப்பு விருதுகள்

தொழில்முறை அல்லாத புகைப்படக் கலைஞர்களுக்கான விருதுரூ.75 ஆயிரம் பரிசுத் தொகையைக் கொண்டது. மேலும் 5 சிறப்பு விருதுகள் வழங்கப்படும். ஒவ்வொன்றும் ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகையைக் கொண்டது.

இப்பிரிவில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘இந்தியாவின் கலாச் சாரப் பாரம்பரியம்’ என்பதாகும்.

போட்டி தொடர்பான கூடுதல்விவரங்கள் அறிந்து கொள்ளவும், புகைப்பட பதிவுகளுக்கும் photodivision.gov.in, pib.gov.inஆகிய இணையதளங்களை பார்க்க லாம். மேற்கண்ட தகவலை மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT