சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மரம் வளர்ப்பை அதிகரிக்கவும் கூடலூர் என்எஸ்கேபி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விதைப் பந்துகள் தயாரித்தனர்.
கூடலூர் என்எஸ்கேபி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விதைப் பந்துகள்தயாரிக்கும் வகையில் நாட்டு மரங்களான வேம்பு, பூவரசு, புங்கை, மலைவேம்பு, சந்தனவேம்பு, சரக்கொன்றை ஆகிய விதைகளை சேகரித்தனர். பின்பு பள்ளி வளாகத்தில் இருந்துகளிமண்ணை சேகரித்து பந்து போன்று உருட்டி அதில் விதைகளைப் புதைத்தனர். தலைமை ஆசிரியர் சி.முருகேசன், உதவி தலைமை ஆசிரியர் பா.வெங்கட்குமார் ஆகியோர் முன்னிலையில் தாங்கள் தயாரித்த விதைப் பந்துகளை எடுத்துச் சென்று கூடலூரைச் சுற்றியுள்ள மலையடிவாரங்கள், 18-ம்கால்வாய் ஓரங்களிலும் வீசினர். இதற்கான ஏற்பாடுகளை இளம் செஞ்சிலுவைச் சங்க ஆலோசகர் அ.செல்வன்,ஆசிரியர் பி.சுப்புராஜ், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் வே.சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.