மதுரை கருப்பாயூரணி அருகே கொண்டபெத்தான் கிராமத்தில் நடுநிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் சார்பில் அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரியக் கலையான தோல்பாவைக் கூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆசிரியர் பீட்டர் வரவேற்றார். ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற முத்து லட்சுமணராவ் குழுவினர் தூய்மை இந்தியா, நெகிழி ஒழிப்பு, மரம் வளர்ப்பு, இயற்கை பாதுகாப்பு, நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு குறித்து தோல்பாவைகள் மூலம் கூத்துநடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து முத்து லட்சுமணராவ் கூறுகையில், “தமிழர்களின் பாரம்பரியக் கலையான தோல்பாவைக் கூத்து அழிந்து வருகிறது. இளைய தலைமுறையினரிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.