ராமநாதபுரம் அருகே நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் கண்மாய், ஊரணி பகுதிகளில் பனை விதைகள் விதைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள் இளஞ் செம்பூர் கிராமத்தில் உள்ள கண்மாய், ஊரணிக் கரைகளில் பனைமர விதைகளை விதைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை ரெனிஜா, தேசிய பசுமைப்படை ஒருங்கினைப்பாளர் ஆசிரியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவ, மாணவிகளின் இந்த சமூகப் பணியை இளஞ் செம்பூர் ஊர் மக்கள் பெரிதும் பாராட்டினர்.