ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் ஆயிரம் செயல்விளக்க நிகழ்ச்சியில் இயற்பியல் பேராசிரியர் சுப்பையா பாண்டியன் மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கிறார். 
நம்ம ஊரு நடப்பு

இரும்பினால் செய்யப்பட்ட கப்பல் தண்ணீரில் எப்படி மிதக்கிறது? - ராஜபாளையம் பள்ளியில் அறிவியல் செயல்விளக்கம்

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆயிரம் செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டவும் அவர்களுக்கு அறிவியல் துறைகள் மீது ஈர்ப்பு ஏற்படுத்தவும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் இயற்பியல் பேராசிரியரும், தருமபுரி மண்டல கல்லூரி கல்வி முன்னாள் இணை இயக்குநருமான அ.சுப்பையா பாண்டியன் மாணவர்கள் மத்தியில் அறிவியல் செயல்விளக்கம் அளித்தார்.

புல்லாங்குழலில் இருந்து இசை எப்படி வருகிறது? என்பதையும், ஒரு சிறிய இரும்பு குண்டு தண்ணீர் உள்ள வாளியில் மூழ்கிவிடும்போது இரும்பினால் செய்யப்பட்ட கப்பல் தண்ணீரில் எப்படி மிதக்கிறது? என்பதை திராட்சைப் பழ சோதனை மூலமாகவும் செய்துகாட்டி விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

அறிவியல் தொடர்பான மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பேராசிரியர் சுப்பையா பாண்டியன் பதில் அளித்தார். இவர் இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை
யின் சிறப்பு விருதையும், தேசிய அறிவியல் கழக நல்லாசிரியர் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.ஏ.ரமேஷ் வரவேற்றார். பள்ளியின் செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா முன்னிலை வகித்தார். நிறைவாக, உதவி தலைமை ஆசிரி யர் ஆர்.இளையபெருமாள் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT