பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாநில தடகள போட்டி திருச்சியில் நவ.18 முதல் 23 வரை நடைபெற்றது. இதில் 3,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.சர்மிளா கலந்து கொண்டார்.
இவர் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில், 13.74 மீட்டர் தூரம் எறிந்து மாநில அளவில் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் பெற்றார்.
இதன் மூலம் இம்மாணவி டிசம்பரில் பஞ்சாபில் நடைபெறும் தேசிய குண்டு எறிதல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.