இளையோர் செஞ்சிலுவை சங்க அமைப்பின், பெரம்பலூர் மாவட்டஉறுப்பினர்களுக்கான கருத்தரங்கம், பெரம்பலூர் சாரண, சாரணிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்குக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் மாரி மீனாள், வேப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் குழந்தைராஜன், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளைகவுரவச் செயலாளர் என்.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடப்பு ஆண்டின் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் தேர்வில், பெரம்பலூர் கல்வி மாவட்ட அமைப்பாளராக முனைவர் த.மாயகிருஷ்ணன், பொருளாளராக மு.கருணாகரன், வேப்பூர் கல்வி மாவட்ட அமைப்பாளராக வெ.ராதாகிருஷ்ணன், பொருளாளராக வி.ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, 2020-ம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிடப் பட்டது.
இணை அமைப்பாளர்கள் எம்.ஜோதிவேல், ஆர்.துரை, மண்டல பொறுப்பாளர்கள் செல்வக்குமார், எம்.செல்வராஜ், காசிராஜன், ரகுநாதன் மற்றும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளிலிருந்து 136 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் கருணாகரன் வரவேற்றார், இணை அமைப்பாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.