நம்ம ஊரு நடப்பு

அரசு பள்ளிக்கு 100 புத்தகங்கள் நன்கொடை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி அருகே பொன்னகரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பில் 100 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. பொன்னகரத்தில் சனிக் கிழமை நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன் தலைமை வகித்தார். மணமேல்குடி வட்டார வள மேற்பார்வையாளர் தனலட்சுமி, அறந்தாங்கி வட்டார வள மேற்பார்வையாளர் சிவயோகம், அமைப்பின் திட்ட இயக்குநர் யாஸ்மின் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிக்கு 100 புத்தகங்களை திசைகள் அமைப்பின் தலைவர்தட்சிணாமூர்த்தி வழங்கினார். முன்னதாக, அந்த அமைப்பின் நிர்வாகி முபாரக் அலி வரவேற்றார். நிறைவாக, பொருளாளர் முகமது முபாரக் நன்றி கூறினார். புத்தகங்களை தானமாக வழங் கிய திசைகள் அமைப்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT