கோப்புப்படம் 
நம்ம ஊரு நடப்பு

அரசு பள்ளியில் குழந்தைகள் திரைப்பட விழா

செய்திப்பிரிவு

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் திரைப்பட விழா நவ.14, 15 மற்றும் 18 தேதிகளில் நடைபெற்றது. விழாவை பள்ளியின் தலைமைஆசிரியை தமிழரசி தொடங்கி வைத்தார்.

முதல் 2 நாட்கள் குறும்படங்களும் மூன்றாம் நாளில்தாரே ஸமீன் ஃபர் திரைப்படமும் காண்பிக்கப்பட்டன. ஆசான்,ஒன் மார்க், மிஸ்டர். பீன், கர்ணமோட்சம், பார் சைக்கிள், பிச்சைக்காரன், பாலுமகேந்திராவின் கதைநேரம் மற்றும் சோசியல் மீடியாசுப்பிரமணி ஆகிய திரைப்படங்களை ஒருங்கிணைத்து பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஜோ.செந்தில் நாதன் மாணவர்களுக்கு காண்பித்தார்.

மேலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடத்தினர்.

SCROLL FOR NEXT