சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிதம்பரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு மண் உண்டியல் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுஊராட்சி ஒன்றியம், சிதம்பரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேமிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. பள்ளியின்தலைமை ஆசிரியை ராஜகுருவம்மாள் தலைமை வகித்தார். சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார்.
ஆசிரியை கற்பகம் வரவேற்றார். மாணவர்களுக்கு சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில்மண் உண்டியல்களை, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஆணையர் முத்துக்குமார் வழங்கினார்.
மாணவர்கள் தினமும் தங்களுக்குக் கிடைக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிக்கவும், சேமிப்பு பழக்கம் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக, ஆசிரியை சுபத்ரா நன்றி கூறினார்.