செந்துறையில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக 815 மாணவிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான துணிப்பைகளை ஆசிரியர்கள் வழங்கினர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பள்ளியில் பயிலும் 815 மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தங்களது செலவில் ரூ.20 ஆயிரத்து 375 மதிப்பிலான துணிப்பைகளை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு பள்ளியின்தலைமையாசிரியை ஆதிரை தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் தினகரன் முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர்கள் தமிழ்களம் இளவரசன், சுரேஷ், தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.