நம்ம ஊரு நடப்பு

பள்ளி மாணவர்களுக்கு ஓரிகாமி பயிற்சி

செய்திப்பிரிவு

நாகை ஒன்றியம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஓரிகாமி பயிற்சி அளிக்கப்பட்டது.

காகிதங்களை வீணாக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளி வளாகத்தை காகித குப்பை இல்லாத தூய்மை வளாகமாக பராமரிக்கவும், பயன்படுத்தப்பட்ட காகிதத்தில் இருந்து காகித மடிப்புகள் மூலம் வடிவங்களை உருவாக்கவும் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. வாசித்து முடித்த செய்தித்தாள்களில் இருந்து பிஷப் தொப்பி, மீனவர் தொப்பி, கவ்பாய் தொப்பி, பட்லர் தொப்பி, செவிலியர் தொப்பி, மகாராணி தொப்பி, இளவரசி தொப்பி , மகாராஜா கிரீடம் என 10-க்கும் மேற்பட்ட தொப்பிகள் செய்வதற்கு இரிஞ்சியூர் பள்ளி ஆசிரியர் பால இரணியன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும், பயன்படுத்தப்பட்ட காகிதங்களிலிருந்து தவளை, வண்ணத்துப்பூச்சி உட்பட பலவேறு வடிவங்கள் செய்யவும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதுதவிர, மாணவிகளுக்கு காதணி, வளையல் போன்ற அணிகலன்களை பட்டு நூல்மூலம் அழகுபடுத்தும் பயிற்சியை நாகலூர் பள்ளி ஆசிரியர் அருள்ஜோதி அளித்தார். நிகழ்ச்சியை, பள்ளித் தலைமை ஆசிரியர் சிவா தொடங்கி வைத் தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் கி.பாலசண்முகம் செய்திருந்தார்.

SCROLL FOR NEXT