நம்ம ஊரு நடப்பு

நவம்பர் 14-ல் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டுப் போட்டி

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணி வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் மாவட்டஅளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில், கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். தடகளம், கால்பந்து, கையுந்துப் பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும். தடகளத்தில் 100 மீ, 400 மீ, 800 மீ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறும்.

இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் நவம்பர் 14-ம் தேதி காலை 8 மணிக்கு காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழக மைதானத்தில் உரிய பள்ளி, கல்லூரிகளில் பெற்ற நன்னடத்தை சான்றிதழுடன் நேரில் வரவேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய 7401703481 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT