கோவில்பட்டி
தேசிய யோகா போட்டியில் கோவில்பட்டி பள்ளி மாணவர் எஸ்.ஜெகதீசன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜோரா என்ற பகுதியில் யோகா அசோசியேஷன் சார்பில் கடந்த வாரம் தேசிய அளவிலான ஹட யோகா போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
18 வயதுக்குட்பட்டோருக்கான நடன யோகா போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி 5-ம் வகுப்பு மாணவர் எஸ்.ஜெகதீசன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவர் ஜெகதீஷ், யோகா பயிற்சியாளர் சோலை நாராயணன் ஆகியோரை பள்ளியின் முதல்வர் பி.முத்துலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.