அரியலூர்
அரியலூர் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போலீஸார் தீபாவளி பரிசுகள் வழங்கினர்.
அரியலூர் அருகேயுள்ள கடு.பொய்யூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 40 மாணவர்கள் படித்து வருகின்
றனர். இப்பள்ளிக்கு சனிக்கிழமை சென்ற அரியலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீஸார், ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.200 மதிப்பில் தீபாவளி பரிசுகளை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அப்போது, தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடும்படியும், சாலை விதிகளை கடைபிடிக்கும்படியும் மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் மதிவாணன் அறிவுறுத்தினார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களில் நோட்டு, பேனா, பென்சில், திருக்குறள் புத்தகம், கலர்பென்சில், இனிப்பு, காரம் உள்ளிட்டவை இருந்தன. அதை பெற்றுக்கொண்ட மாணவர்கள், போலீஸா
ருக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், மீனாகுமாரி மற்றும் போக்குவரத்து போலீஸார் கலந்து கொண்டனர்.