தேவகோட்டை
சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சூரன், தே.பிரித்தோ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 198 மாணவர்கள் பங்கேற்றனர். முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் மாநிலப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை தே.பிரித்தோ மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் பிரபாகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.