நம்ம ஊரு நடப்பு

தனித்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் அறிவுரை

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்

மாணவர்கள் புத்தகங்களைப் படித்துதங்களது தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் அறிவுரை கூறினார்.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்டக்கல்வி அலுவலர் சி.கார்த்திகேயன், இந்து தமிழ் ‘வெற்றிக்கொடி’ நாளிதழை பள்ளிமாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமைவழங்கினார். நாளிதழை பெற்றுக் கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் படித்தனர். முன்னதாக மாவட்டக் கல்வி அலுவலர் சி.கார்த்திகேயன் பேசியதாவது:

மாணவர்கள் நாளிதழ்களை தினமும் படித்து பொதுஅறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். இன்றைய செய்திகள் மாணவர்களின் எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் பாடப்புத்தகங்களை மட்டும் படிக்காமல், நீதிக்கதைகள், அறிவியல், மருத்துவம் போன்றவை தொடர்பான புத்தகங்களைப் படித்து தங்களது தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் பள்ளித் துணை ஆய்வாளர் ஆர்.வி.ராமநாதன், அக்கரைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ந.கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நாகப்பட்டினம் நகராட்சிபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மகேஸ்வரன் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவி களுக்கு ‘வெற்றிக்கொடி’ நாளிதழ்களை வழங்கினார்.

SCROLL FOR NEXT