கோப்புப்படம் 
நம்ம ஊரு நடப்பு

மாரந்தை சவேரியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

செய்திப்பிரிவு

கடலாடி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள மாரந்தை சவேரியார் பட்டினத்தில் அரசு உதவி பெறும் பள்ளியான தூய குளுனி மேல்நிலைப் பள்ளி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை வினோலியா தலைமை வகித்தார்.

தாளாளர் ஜெயமேரி முன்னிலை வகித்தார். இல்லத் தலைவி லூர்துமேரி வரவேற்றார். அறிவியல் கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

அவற்றின் செயல்பாடுகளை பார்வையாளர்களுக்கு விளக்கினர். இக்கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

SCROLL FOR NEXT