இந்திய கிரிக்கெட் அணி முதல் உலகக் கோப்பை பெற காரணமாக இருந்தவர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்களை வீழ்த்தியவர் கபில்தேவ்.1959 ஜனவரி 6-ம் தேதி சண்டிகரில் பிறந்தார்.
1978 அக்டோபர் 16-ல் ஃபைசலாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். கராச்சி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 33 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.
இதன்மூலம் விரைவாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 50 ஓட்டங்களை அடித்த இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார். டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார்.
இந்த வெற்றியின் மூலமாக இவர் பரவலாக அறியப்பட்டார். கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதே உத்வேகத்துடன் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்த்து 1983-ல்உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.
இந்திய அணிக்காக முதல் உலகக் கோப்பையை பெற்றுத்தந்த கபில்தேவ் 1994-ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.