நடப்புகள்

பிளஸ் 2 துணைத்தேர்வு விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதம் நடைபெற்ற பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலை இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதற்கான விண்ணப்பத்தை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய கட்டணத்துடன் செப்டம்பர் 8, 9, 10-ம் தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT