நடப்புகள்

“ஸ்மார்ட் கிளாஸ்” தொடக்க விழாவில் கேஜ்ரிவால் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த “ஸ்மார்ட் கிளாஸ்” திட்டத்தை தொடங்கி வைக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் திங்களன்று (செப் 5) தமிழகம் வருகிறார்.

கோவை திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தமிழக மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த “ஸ்மார்ட் கிளாஸ்” திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி சென்றபோது அங்குள்ள அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதை பார்த்துவிட்டு அதனை தமிழகத்திலும் தொடங்கி வைப்பதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தமிழகம் வர வேண்டுமென கேட்டேன். அவரும் இத்திட்டத்தை தொடங்கிவைக்க திங்களன்று (செப்., 5) தமிழகம் வருகிறார். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT