நடப்புகள்

பாரதியார் பல்கலையில் இளநிலை மற்றும் பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

செய்திப்பிரிவு

இளநிலை Animation மற்றும் Data Analytics பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டு இளநிலை பட்டப் படிப்புகளான B.Voc. Business process and Data Analytics மற்றும் B.Voc. Multimedia andAnimation 3 ஆண்டு படிப்புக்கு 12-ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பல்கலை. இணையதளத்தில் UG Admission 2022-2023 என்ற Portal மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டு இளநிலை பட்டப் படிப்பும் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படுகிறது. மேலும், இது,மத்திய திறன் மேம்பாட்டு மையத்தால் அங்கீகரிக்கப்பட்டு பாரதியார் பல்கலைக்கழகத்தால் பட்டம் வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை பெறும்வசதியும் அளிக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு பாரதியார் பல்கலைக்கழக www.b-u.ac.in இணையதளத்தப் பார்க்கலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

          
SCROLL FOR NEXT