நடப்புகள்

1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி- கேந்திரியா வித்யாலயா அறிவிப்பு

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் 1,235 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 14 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தற்போது கரோனா வைரஸ் அச்சத்தால் நாடு முழுவதும் எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்து வகையான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து நடப்பாண்டு 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக கேந்திரிய வித்யாலயா அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு கடந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியை நிர்ணயிக்க அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT