தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான பளுதூக்கும் போட்டியானது 24.01.2020 அன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது.
இந்த விழாவுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகப் பதிவாளர் சே. சந்தோஷ் பாபு லைமை தாங்கி துவக்கி வைத்து பேசுகையில் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைகளும் மன வலிமை, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் போட்டியில் கலந்து கொள்ளும் போது வெற்றியினை லகுவாக அடையலாம் எனப் பேசினார் .
மாலை நடைபெற்ற இப்போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சியான பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ராஜேஷ் கலந்து கொண்டார். வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்து பாராட்டிப் பேசிய அவர் போட்டியில் வெற்றி தோல்வியை விட பங்களிப்பு மிக அவசியம் எனப் பேசினார்.
இப்போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் உள்ள 85 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்றனர். இப்பளுதூக்கும் போட்டியானது ஆண்களுக்கு 8 பிரிவுகளிலும் பெண்களுக்கு 7 பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களின் முறையே வெள்ளூர், திருவள்ளுவர் பல்கலைக்கழக அணி முதல் இடத்தையும், சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழக அணி இரண்டாவது இடத்தையும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி முதல் இடத்தையும், வெள்ளூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக அணி இரண்டாவது இடத்தையும், சேலம் பெரியார் பல்கலைக்கழக அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறைத் தலைவர் முனைவர் செ.துரை செய்து முடிவில் நன்றியுரையாற்றினார்.
முன்னதாக உதவிப் பேராசிரியர் முனைவர் சு.ஆறுமுகம் வரவேற்றுப்பெசினார். இந்நிகழ்ச்சியினை உதவிப் பேராசிரியர் முனைவர் ரெ. பேச்சிமுத்து தொகுத்து வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் பல்கலைக்கழக பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்களும், உறுப்புகல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறைப் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.