வெள்ள பாதிப்பின்போது மத்திய அரசு வழங்கிய அரிசிக்காக, ரூ.205 கோடி தரவேண்டும் என்று மத்திய உணவுப்பொருட்கள் வழங்கல் துறை (எப்சிஐ) கேரள அரசை கேட்டுள்ளது.
இதுதொடர்பாக கேரள அரசுக்கு எப்சிஐ அனுப்பிய கடிதத்தில், “2018-2019-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, பொதுமக்களின் உணவு தேவைக்காக, 89,540 டன் அரிசியை மத்திய உணவு வழங்கல் துறை வழங்கியது.
அதற்கான தொகையாக, ரூ.205.81 கோடியை கேரள அரசு உணவுத் துறைக்கு வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
பாரிஸ் புத்தக காட்சி: இந்தியாவுக்கு அழைப்பு
புதுடெல்லி
பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் நடைபெறும் பாரிஸ் புத்தகக் கண்காட்சி, மார்ச் மாதம் தொடங்குகிறது. இதில் இந்தியா கவுரவ விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். 3-வது முறையாக இந்த கண்காட்சியில் கவுரவ விருந்தினராக இந்தியா கலந்து கொள்ளவிருக்கிறது.
இதற்கு முன்னர் 2002, 2007 ஆகிய ஆண்டுகளில் சென்றது. இதில் இந்தியாவின் சார்பில் நாட்டின் வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்த 30 எழுத்தாளர்களும், 15 பதிப்பாளர்களும் பங்கு பெறவுள்ளனர். இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் கூறுகையில், ‘‘இந்தியாவின் 20 தலைப்புகளும், 15 நூல்களும் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கபட உள்ளன’’ என்றனர்.
- பிடிஐ