ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா, தேசியப் பசுமை படையின் 50 மரக்கன்றுகள் நடும் திட்டம் விழா, மாணவர் பெற்றோர் உறவை மேம்படுத்த இருவரும் சேர்ந்து 200 மரக்கன்றுகள் நடும் விழா என முப்பெரும் விழாவாக வியாழக்கிழமை நடைபெற்றது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமயில் ஆசிரியர்கள் அனைவரும் குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.
தொடர்ந்து ஆசிரியர் மாணவர்கள் இணைந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பெர்ணடிட் , விதைகள் அமைப்பின் நிறுவனர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பரையாற்றினர்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேசவேண்டும், பாடல், விளையாட்டு ,நடனம் நகைசுவை சார்ந்த செயல்களில் நேரம் செலவிட வேண்டும் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து பெற்றோர் - மாணவர்கள்-ஆசிரியர்கள் உறவை வலுப்படுத்த மூவரும் இணைந்து பள்ளியில் 250 மரங்களை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நட்டனர். மேலும் தேசிய பசுமை படை சார்பாக 50 மரக்கன்றுகளும் நடப்பட்டன.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஈஸ்வரன் , கிராம கல்வி குழு உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பள்ளி பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
எஸ். முஹம்மது ராஃபி