நடப்புகள்

முஸ்லிம் பெண்களுக்கு மசூதிக்குள் அனுமதி? அரசுக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளிலும் முஸ்லிம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று யாஸ்மின் ஜூபர் அஹ்மத் பீர்சாட் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘‘மசூதிக்குள் பெண்களைஅனுமதிக்க அரசுக்கும், வக்ஃப் வாரியம் போன்ற முஸ்லிம் அமைப்புகளுக்கும் உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT