நடப்புகள்

யானை மீது அமர்ந்து வாக்களிக்க வந்த தொழிலதிபர்

செய்திப்பிரிவு

மும்பை:

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்றுமுன்தினம் நடந்து முடிந்தது. அப்போது ஜல்கான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குச் சாவடிக்கு தொழிலதிபர் ஆனந்த் மராத்தி வந்தார். அவர் சாதாரணமாக வராமல், யானை மீது அமர்ந்து வந்தார்.

அங்கு வாக்குச்சாவடிக்கு வெளியே இருந்த வாக்காளர்கள் அனைவரும் அவர் யானையில் வந்ததை பார்த்து உற்சாகம் அடைந்தனர். பின்னர் தொழிலதிபர் ஆனந்த் மற்றும் யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதற்கிடையில், யானையை வாக்குச்சாவடிக்கு வெளியே நிறுத்திவிட்டதால் அங்கு கூடியிருந்த மக்களை சமாளிப்பதில் காவலர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. செய்தியாளர்களிடம் ஆனந்த் கூறும்போது, வாக்களித்துவிட்டு வெளியில் வந்தஆனந்த், “வாக்களிப்பின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே யானையில் வந்தேன்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT