துர்கா பூஜையில் மகா அஷ்டமி அன்று நடக்கும் குமாரி பூஜை மிகவும் சிறப்பானது. இந்த நாளில் சிறுமிகளை அழைத்து வந்து அவர்களை துர்கா தேவியாக நினைத்து வழிபடுவார்கள்.
இந்நிலையில், சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24-பர்கானாவில் உள்ள அர்ஜூன்பூரைச் சேர்ந்த தமால் தத்தா குடும்பத்தினர், இந்த முறை முஸ்லிம் சிறுமியை அழைத்து அவளை துர்கையாக பாவித்து பூஜை செய்தனர்.
இதுகுறித்து தமால் தத்தா கூறும்போது, ‘‘சமூக நல்லிணக்கத்தை உண்டாக்க, மதம், சாதி பாராமல் முஸ்லிம் சிறுமியை துர்கா தேவியாக நினைத்து வழிபட்டோம்’’ என்றார்.