ஆங்கிலம் அறிவோம்

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?

செய்திப்பிரிவு

​ஜி.எஸ்.எஸ்.

மருத்துவமனையில் பூபதியின் உறவினரை சேர்த்திருக்கிறார்கள். பார்வையாளர்களுக்கான அனுமதி நேரம் தொடங்கவில்லை.

எனவே பூபதி மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போது அந்தப் பக்கமாக வரும் மருத்துவமனை ஊழியர் ரவியுடன் அவன் உரையாடுகிறான்.

Boopathy – (அங்கு சென்று கொண்டிருக்கும் ஒருவரைக் காட்டி) He is a doctor?

Ravi – Yes. He is a doctor.

Boopathy – (அங்கு சென்று கொண்டிருக்கும் ஒரு பெண்ம​ணியைக் காட்டி) Is she also a doctor?

Ravi – No. She is a sister.

Boopathy – How long she is working in this hospital?

Ravi – May be seven years, eight months.

Boopathy – She seems to be very kindly.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள்.

மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளை பார்ப்போம். பேச்சின்போது சிலதவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

He is a doctor என்பது ஒரு வாக்கியமே தவிரக் கேள்வியல்ல. நம்மில் பலரும் கேள்வித்தன்மையை குரலில் கொண்டு வந்து இப்படிக் கேட்கிறோம். அது தவறு. Is he a doctor? என்றுதான் பூபதி கேட்டிருக்க வேண்டும்.

பதிலுக்கு ரவி yes, he is a doctor என்கிறார். அதற்குப் பதில் yes, he is என்றுகூட அவர் கூறியிருக்கலாம்.
வேறொரு இடத்தில் she is a sister என்கிறார். Sister என்றால் சகோதரி. மருத்துவமனையிலுள்ள nurse-களைக் கூப்பிடும்போது sister என்று குறிப்பிடுவது உண்மைதான். ஆனால், அவர் யார் என்பதைப் பிறரிடம் சொல்லும்போது she is a
nurse என்றுதான் குறிப்பிட வேண்டும்.

அந்த nurse ஏழு வருடம், எட்டுமாதம் பணிபுரிவதாகத் தெளிவாகவே குறிப்பிடுகிறார் ரவி. பிறகுஎதற்கு may be என்ற வார்த்
தைகள். May be 7 to 8 years என்று பதில் அளித்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் அங்கே தோராயமாக என்கிற பொருள் வருகிறது.

She seems to be very kindly என்பதைவிட she is kind என்பதுதான் சரியான வாக்கியம்.

SCROLL FOR NEXT