மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 
தலையங்கம்

வைரஸை அண்ட விடாதீர்!

செய்திப்பிரிவு

சிறப்பு காய்ச்சல் முகாம் தமிழகத்தில் 1000 இடங்களில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு டெங்கு, ப்ளு வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை கண்காணித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது இன்புளூயன்சா காய்ச்சலால் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத் துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர நேற் றைய நிலவரப்படி ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 53 பேருக்கும், ஐந்தில் இருந்து 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 16 பேருக்கும் வெவ்வேறு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் ஏற்படும்போது ஒன்றரை சதவீதம் காய்ச்சல் உயர்வது வழக்கம் என்று இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்று கூறியுள்ளார்.

காலாண்டு தேர்வுகள், அதையடுத்து நவராத்திரி விழா கால விடுமுறை வரும் இச்சமயத்தில் காய்ச்சல் பரவல் அதிகரிப்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் மாணவர்கள் நடந்து கொள்வது அவசியமாகிறது. இதுவரை ஆர்வமாக கற்ற பாடங்களை சிறப்பாக எழுதி உங்களது கற்றல் திறனை நிரூபிக்கும் நேரம் இது. ஆகையால் தினந்தோறும் நன்கு கொதிக்க வைத்த குடிநீர், வீட்டில் சமைத்த சத்தான உணவுப் பண்டங்களை மட்டும் உட்கொள்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். முகக்கவசம் அணிந்து மட்டுமே வெளியே செல்லுங்கள். இத்தகைய நேரத்தில் வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்த்துவிட்டால் பிறகு தேர்வு முடிந்ததும் விடுமுறையை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் கழிக்கலாம்.

SCROLL FOR NEXT