தலையங்கம்

பலத்துறை அறிவும் அவசியம்

செய்திப்பிரிவு

அன்பு மாணவர்களே,

நம் சமூகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி ஆகியவை வீரியத்துடன் செயல்படும் போது அதில் மாற்றங்கள் நிகழும். தற்போது நீங்கள் முதுகில் சுமந்து செல்லும் புத்தக மூட்டை இதன் நீட்சி தான். நாம் வியந்து பார்க்கும் அனைத்து துறைகளின் ஆணி வேர் உங்கள் முதுகுக்கு பின் தான் உள்ளது. இதில் உள்ளபடியே அனைத்து துறைகளும் விரிவடைந்து கொண்டு தான் இருக்கின்றன.

விழித்துக்கொள்ளுங்கள்! அடிப்படையில், வழக்கமாக நமது விருப்பமான பாடம் மற்றும் துறை சார்ந்து மட்டுமே சிந்திப்பதும் இயங்குவதுமாக இருப்போம். அது இயல்பு தான்.

ஒரு நல்ல செயலும் கூட தான் என்றாலும், தற்போதைய உலகம் அடைந்துவரும் பரிமாணத்துக்கு ஏற்ப நம்மை தயார் செய்து கொள்வது அவசியம். ஏனென்றால் நாம் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு பருவநிலை மாற்றம் நடந்து வருகிறது. ஒரு பொறியியல் மாணவருக்கும் சுற்றுச்சூழலுக்கும் தொடர்பு இல்லை என்று ஆகிவிடுமா?

நீங்கள் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த மாணவராக, தமிழ் மீது பற்று கொண்டவராக அல்லது கணக்கில் புலியாகவோ இருந்தாலும் நன்மை தான். ஆனால் அவற்றோடு நின்றுவிடுவது தவறு. மாணவர்களே... இதற்கு நாம் என்ன செய்யபோகிறோம்? உதாரணமாக வரலாற்றை ஆழ்ந்து படிக்கும் மாணவரும் குறைந்தபட்சமாக வேதியல், உளவியல் குறித்து அடிப்படையாவது தெரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் படிக்கும் பாடங்களை மற்ற பாடங்களுடன் இணைத்துப் பார்ப்பது. அதில் இருக்கும் ஒற்றுமைகள் என்னவென்று அலசிப் பார்ப்பது அவசியம். இப்படியாக பல்துறை அறிவையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதன்மூலம் நமது சிந்தனைகள் மேலும் விரிவடைவது மட்டுமல்லாமல் ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் பார்க்க முடியும் என்பதே நிதர்சனம். இப்பூவுலகு நம்முடையது தானே!

SCROLL FOR NEXT