தலையங்கம்

அழிவை ஏற்படுத்தும் இ-கழிவு

செய்திப்பிரிவு

எதற்கும் உதவாது என்பதற்கு குப்பை என்று கூறுவார்கள். ஆனால், குப்பையால் எதுவுமே செய்ய முடியாதா? மனிதர்களையும், சுற்றுச்சூழல்களையும் முடமாக்கும் வல்லமை குப்பைகளுக்கு உண்டு என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்திய நகரங்களில் ஆண்டுக்கு 7 கோடி டன் குப்பை சேர்கிறது. இதில் மருத்துவக் கழிவுகள், இ - கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளும் அடங்கும். பிளாஸ்டிக், மருத்துவக் கழிவுகளை தற்போதைய சூழ்நிலைகளில் குறைக்க முடியும். ஆனால், எலக்ட்ரானிக் கழிவுகளின் (இ-கழிவு) எண்ணிக்கை இந்தியாவில் மட்டுமல்ல உலகுக்கே பெரும் சவாலாக உள்ளது.

உலக அளவில் ஆண்டுக்கு சராசரியாக 5 கோடி டன் இ - கழிவுகள் சேர்கின்றன. இது மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்பட்ட அளவுகள் ஆகும். இதுபோக, சுமார் 2 கோடி டன் இ-கழிவுகள் இதர குப்பைகளுடன் சேர்ந்து இருக்கலாம் என்று ஐ.நா.வின் புள்ளிவிவரம் கூறுகிறது.

இதற்கு முக்கிய காரணமாக வீடுகள், அலுவலங்கள் போன்ற இடங்களில் ஏற்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் இருப்பதேயாகும். சர்க்யூட் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் மக்கும் குப்பைகளுடன் சேரும்போது, அது மண்ணில் புதைக்கப்பட்டாலோ, அல்லது எரிக்கப்பட்டாலோ சுற்றுச்சூழலுக்கு பெரிய தீங்காகும். இ - கழிவுகள் எரிக்கப்பட்ட காற்றை சுவாசித்தால், மூளை, நுரையீரல், கணையம் போன்ற முக்கிய உறுப்புகள் கடுமையாக பாதிக்கும்.

எனவே அன்பு மாணவர்களே, நமது வீட்டில் சேரும் சின்ன சின்ன இ-கழிவுகளை முறையாக தரம் பிரித்து கழிவு மேலாண்மையை கற்றுக் கொள்வோம்.

SCROLL FOR NEXT