தலையங்கம்

ஓடி விளையாடு பெண்ணே!

செய்திப்பிரிவு

விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற உடல்ரீதியான செயல் பாடுகளில் உலகளவில் 80 சதவீத இளையோர் போதுமான அளவு ஈடுபடுவதில்லை. இதனால் உடல் ஆராக்கியத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . 146 நாடுகளில் உள்ள 11-17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மிக பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. அதிலும் இந்திய மாணவர்களைவிட மாணவிகள் கூடுதலாக பாதிப்புக்கு உள்ளாகுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

இதில் இந்திய மாணவர்கள் பெருவாரியான நேரம், ஸ்மார்ட்போன், தொலைக்காட்சிக்கு முன்னால் கழிக்கிறார்களாம். மாணவிகள் விளையாடுவது உள்ளிட்ட உடல்ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடாமல் ஆரோக்கியத்தை இழக்க காரணம் என்ன தெரியுமா? இன்றும்பெரும்பாலான பெண் குழந்தைகள் பள்ளி நேரம் போக மீதி நேரம் தங்களுடைய வீட்டு வேலைகளை செய்ய பணிக்கப்படுகிறார்களாம். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற நிலையில் இருந்து ஒவ்வொரு பெண்ணையும் படிக்க வைப்போம் என்ற கட்டத்துக்கு இந்தியா முன்னேறி இருக்கிறது. 2018-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த பெண் விளையாடு வீராங்கனைகள் பேட்மிண்டனில் பி.வி.சிந்து,குத்துச்சண்டையில் மேரி கோம், தடகளத்தில் ஹீமாதாஸ், கிரிக்கெட்டில் ஹர்மன்ப்ரீத் கவுர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனாலும் இவர்கள் விரல்விட்டு எண்ண கூடியவர்களே. இன்னும் கோடிக்கணக்கான பெண்கள் படிப்புக்குப் பிறகு அடுப்படி என்ற கதியில்தான் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமூகமாக இணைந்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும்.

SCROLL FOR NEXT