இந்த பூமியில் உள்ள இயற்கை வளங்கள், உயிரினங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. இதைநமது முன்னோர்கள் நன்கு புரிந்து கொண்டதால்தான், அவர்கள்இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள். இயற்கை வளமும் கெடாமல்தொடர்ந்து மனிதர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டது. ஆனால் நிலைமை தற்போது தலைகீழாக மாறிவிட்டது.
மனிதர்கள் செய்யும் பல வேலைகள், தொழிற்சாலை பெருக்கங்கள்,அலட்சியம், பேராசை போன்ற பல செயற்கை காரணிகளால் பூமியேசூடாகிவிட்டது. நாம் வெளியிடும் கரியமில வாயுக்கள் ஒருபக்கம் அதிகரித்து சுற்றுச்சூழலை பாதித்து விட்டது. காற்று மாசுபாடு அதிகரித்துவிட்டது. அத்துடன் பூமியையும் நாம் விட்டு வைக்கவில்லை. ஆழ்துளை கிணறுகள் மூலம் பெரும்பாலான தண்ணீரை உறிஞ்சி எடுத்துவிட்டோம். தற்போது பூமியும் வறண்டு கிடக்கிறது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை, குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. இதுதான் பெரும்பாலான இடங்களின் நிலைமை.
இயற்கை நம்மை முழுவதுமாக எப்போதும் கைவிடுவதில்லை. அவ்வப்போது மழை தந்து காக்கிறது. அதன்மூலம் காற்று மாசுப்பாடு கொஞ்சம் குறையும். அத்துடன் நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.
ஆனால், மழைநீரை சரியான முறையில் சேமிக்கும் கட்டமைப்புகள்வேண்டும். அதை ஒவ்வொரு வீட்டிலும் செய்ய வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம்..
‘‘நீரிஇன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு’’தண்ணீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது. அந்த நீரைத் தரும் மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
இதுதான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் கூறியது. அவர் காலத்தில் தண்ணீர் பிரச்சினை எல்லாம் கண்டிப்பாக இருந்திருக்காது. எனினும், நீரின் முக்கியத்துவத்தை அன்றேதமிழர்கள் உணர்ந்துள்ளனர். மழை இல்லாவிட்டால், மனிதர்களின் ஒழுக்கமும் இருக்காது என்று முடிப்பதுதான் வள்ளுவரின் எச்சரிக்கை. அதாவது தண்ணீருக்காக 3-வது உலகப் போர் வரும் என்று கூறுவதை சிந்தித்துப் பாருங்கள்.