தலையங்கம்

மழையும் டெங்குவும் எச்சரிக்கை...

செய்திப்பிரிவு

அன்பான மாணவர்களே...

வடகிழக்குப் பருவமழை சரியாகத் தொடங்கி விட்டது. அதற்கு முன்பே டெங்கு காய்ச்சல் பரவிவிட்டது. இப்போது பண்டிகைக் காலம். தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ‘ஷாப்பிங்’ செய்ய வெளியில் செல்வீர்கள். எங்கு சென்றாலும், மழையில் நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடை கொண்டு செல்லுங்கள். அசுத்தமான, சேறு நிறைந்த பகுதிகளில் செல்லாதீர்கள். காய்ச்சிய தண்ணீரையே குடியுங்கள்.

பகலில் கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். முழுக்கை சட்டை, பேண்ட் அணிந்தால் நல்லது. காய்ச்சல் வந்தால், வீட்டில் பெற்றோர் தரும் உணவை மட்டுமே சாப்பிடுங்கள். அது உங்களுக்குப் பிடிக்காமல் இருந்தாலும், உடல்நலத்துக்காக சில நாட்கள் சாப்பிடுங்கள்.

மழைநீரில் விளையாடாதீர்கள். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன், முகம், கை, கால்களை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள். இவற்றை செய்யாமல் அலட்சியமாக இருக்காதீர்கள். சின்னச் சின்ன விஷயங்களைப் பின்பற்றினாலே, எந்த நோய் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற அடி உலகம் முழுவதும் இப்போது பிரபலமாகிவிட்டது தெரியும்தானே. அதற்கு
அடுத்த அடி என்ன தெரியுமா?

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

- நல்லதும் கெட்டதும் வேறு யார் வழியாகவும் வராது. அது நம் கைகளில்தான் உள்ளது.

SCROLL FOR NEXT