அன்பான மாணவர்களே...
உங்கள் வீட்டில் உள்ள பாதுகாப்பு வெளியில் உள்ளதா? அதைப் பற்றி சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? இனி யோசித்து பாருங்கள். வீட்டை விட்டு பள்ளிக்கு புறப்படுவது முதல், மீண்டும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரை பல சம்பவங்கள் நடந்திருக்கும். சாலையில் பல விஷயங்கள் உங்கள் கண்ணில் படும். பள்ளியில் நண்பர்கள் பல விஷயங்களைப் பேசுவார்கள். பள்ளிக்கு ஆட்டோ அல்லது வேனில் சென்று வருவீர்கள். ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் உங்களிடம் பல கேள்விகளைக் கேட்கலாம். அதற்கு நீங்கள் பதில் சொல்லலாம்.
ஆனால், வீட்டுக்கு வந்தவுடன் எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள். இனி அப்படி செய்யாதீர்கள். அப்பா, அம்மா உட்பட வீட்டில் யார் இருந்தாலும், அன்று என்னென்ன நடந்தது என்பதைப் பற்றி பேசுங்கள். உங்களிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படி பேசுவதன் மூலம் உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அப்பா, அம்மா தெரிந்து கொள்வார்கள்.
நல்ல விஷயங்களை அவர்கள் ஏற்றுக் கொண்டு உற்சாகப்படுத்துவார்கள். உங்களை பாதிக்கும் விஷயமாக இருந்தால், சரியான அறிவுரை கூறுவார்கள். வீட்டில் பேசுவதற்கு தயங்காதீர்கள். என்ன விஷயமாக இருந்தாலும் பேசுங்கள். அதன்மூலம் உங்களுக்கும் தன்னம்பிக்கைப் பிறக்கும். இதுதான் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளும் ஒரே வழி.