ஆப்டெக்கின் புதிய இணைய வழிக் கல்வித் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஆப்டெக் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"முறைசாரா தொழில் பயிற்சி வகுப்புகளை இந்தியாவில் 30ஆண்டுகளுக்கும் மேலாக அளித்துவரும் முன்னணி நிறுவனமான ஆப்டெக் லிமிடெட் புதிதாக புரோஆலே.காம் (ProAlley.com) என்ற பெயரிலான புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
சுயமுயற்சியில் கற்றுக் கொண்டு முன்னேறத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு, தாங்கள் கற்பதையே வாழ்க்கையின் அம்சமாகக் கொண்டு முன்னேறத் துடிப்போருக்கு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையைத் தேர்வு செய்வோர் வீட்டிலிருந்தபடியே சவுகர்யமாக தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளின் வளர்ச்சி மற்றும் இத்துறைகளில் உள்ள அபரிமித வேலைவாய்ப்பு குறித்தும் விரிவாகக் கற்றுத்தரப்படும். இந்த இணைய வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளதன் மூலம், ஆப்டெக் தற்போது ஆஃப்லைன் (Offline), ரிமோட் (Remote), லைவ் (Live), செல்ஃப்-பேஸ்ட் (Self-Paced) ஆகிய அனைத்து முறைகளிலும் கல்வியைக் கற்றுத் தரும் வாய்ப்பை முழுமை செய்துள்ளது.
ஆப்டெக் நிறுவனத்தின் இலக்கான வேலை வாய்ப்பு தரும் கல்வி என்ற நோக்கில், திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, தொழில்நுட்பம் மூலம் தங்களது திறமையை வளர்த்துக்கொள்ள விரும்பும் இளம் தலைமுறையினருக்கு உதவுவதையே இந்த இணையதளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நவீன தொழில்நுட்பம் மற்றும் எளிதில் உபயோகிக்கும் வசதி, இடையூறு இல்லாத தளமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. திறனை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர்களால் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அனிமேஷன் (Animation), வி.எப்.எக்ஸ். (VFX), கேமிங் (Gaming) மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் (Computer Graphics) உள்ளிட்ட பிரிவுகளுக்கான பாடத் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. புரோ (Pro) மற்றும் புரோ பிளஸ் (Pro Plus) என்ற இரண்டு வகையான சான்றிதழ் வகுப்புகள் இதில் கற்றுத் தரப்படும். புரோ பிளஸ் வகுப்பில் கூடுதல் அம்சங்களாக ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான வழிகாட்டுதலை நிபுணர்கள் அளிப்பர். அத்துடன் இதற்குரிய வேலைவாய்ப்பு வழிகாட்டுதலும் அளிக்கப்படும். அது தவிர தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக வழிகாட்டுதல் மற்றும் அவர்களுக்கான பயிற்சிகளை அளிப்பது, அவர்களது செயல்பாடுகளை தனித்தனியே மதிப்பீடு செய்வது ஆகியனவும் இதில் அடங்கும்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.