புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள திருவள்ளுவர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக வரிசையில் நிற்கும் பெற்றோர். படம்: எம்.சாம்ராஜ் 
வெற்றிக் கொடி

கரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் பெற்றோர் தவிப்பு: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

செ.ஞானபிரகாஷ்

கரோனாவால் ஏற்பட்ட ஊரடங் கால் கடும் நிதி நெருக்கடியில் பெற்றோர் தவித்து வருகின்றனர். நிதி நிலைமையைச் சமாளிக்க தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பது புதுச்சே ரியில் அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் 283 அரசு பள்ளி களும், 32 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. 181 தனியார் பள்ளிகள் உள்ளன. மொத்தமுள்ள 57 சதவீத அரசு பள்ளிகளில் 32 சதவீத மாணவர்களே படிக்கின் றனர். மேலும் அரசு பள்ளிகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். எனினும் அதிகளவில் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் படித்து வந்தனர். இச்சூழலில் கரோனா தாக்கத் தால் கடந்தாண்டு பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. நடப் பாண்டும் இதே நிலை நீடிக்கிறது. ஆன்லைனில்தான் வகுப்புகள் நடக்கின்றன.

ஊரடங்கால் தொழில்கள் முடங்கியதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு போதிய வருமான மின்றி மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் இரண்டாவது அலையின் தாக்கம் பொரு ளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற் படுத்தியுள்ளது.

தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பல பெற்றோர் தவிக்கின்றனர்.

இந்நிலையில், கரோனா இரண்டாம் அலை குறையத் தொடங்கி யதால் அரசு பள்ளிகளில் சேர்க்கை தொடங்கியுள்ளது. பெற்றோர் பலர் தனியார் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக் கும் தங்கள் பிள்ளைகளை, அருகிலுள்ள அரசு பள்ளிகளில் சேர்க்க தொடங்கியுள்ளனர். பல பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க கூட்டம் அலைமோதுகிறது.

இதற்கிடையே பல தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்க்க வரும் பெற்றோருக்கு மாற்றுச்சான்றிதழ் தராத சூழலும் ஏற்பட்டது. இதையடுத்து 7ம் வகுப்பு வரை மாற்றுச்சான்று இல்லாமல் அரசு பள்ளிகளில் சேரலாம் என்றும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘நடப்பாண்டில் எவ்வளவு மாணவர்கள் இணைந்துள்ளனர்’ என்பதை சேர்க்கைக்கு பிறகே தெரிவிக்க இயலும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

"அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது ஆரோக்கியமான சூழல் என்றே கருத வேண்டும். இந்த தருணத்தில் புதுச்சேரியில் காலியாக உள்ளதலைமையாசிரியர் பணியிடங் களை நிரப்ப வேண்டும். தொடக் கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை 520 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை வரும் கல்வி யாண்டில் அரசு அதிகப்படுத்த வேண்டும்.

பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், தேவையான பாட ஆசிரியர்கள், இசை, ஓவியம் போன்ற கலை ஆசிரியர்கள் இல்லை. ஓவியர், உடற்பயிற்சி ஆசிரியர், நூலகர் என 150 காலிபணியிடங்கள் உள்ளன. நீண்டவிடுப்பில் போகும் ஆசிரியர்க ளுக்கு மாற்று ஆசிரியர்கள் இல்லை. முக்கியமாக 10, 11, 12ம்வகுப்புகளில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் ஆசிரியர்கள் பணியிடங்களை உறுதிப்படுத்த வேண்டும்" என்று கல்வி சார்ந்த சமூக அக்கறையுள்ளவர்கள் தெரி விக்கின்றனர்.

SCROLL FOR NEXT