உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள சுகாதார கண்காணிப்பும் மதிப்பீட்டு முறைகளையும் வலுவாக்குவதற்கு நாங்கள் அழைக்கிறோம். இதில் முக்கியமாக எதிர்காலத்தில் வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனாவில் புதிய வைரஸ் மூலம் 17,200 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இது 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள் ளது. சீனாவை போல் இங்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பிற நாட்டினர் உள்ளனர். மேலும் இது உலக பொருளாதாரத்துக்கு நல்லதும் அல்ல.
முன்பு இதேபோல் சீனாவில் ஏற்பட்ட வைரஸ் 425 பேரை கொன்றது. மேலும் சார்ஸ் வைரஸால் 2002-03ல் 349 பேர் உயிர் இழந்தனர். எனவே சீனாவின் முயற்சிகளையும் அதன் பொருளாதாரத்தை பராமரிக்கவும் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு உலக வங்கி தெரிவித்துள்ளது.
- ஏஎப்பி
மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.3,520 கோடி ஒதுக்கீடு
புதுடெல்லி
மாநிலங்களவையில் சுகாதாரத்துறை சார்பாக எழுப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அளித்த பதிலில் கூறியதாவது: சுகாதார அமைச்சகத்தின் ஆயுஷ்மான் பாரத் (ஏபி-பிஎம்ஜேஏஒய்) திட்டத்தின் கீழ் பல்வேறு நலனுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 3,520 நிதி கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது மேற்கு வங்கம், தெலங்கானா, ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களில் 20 சதவீதம் பேர் தகுதியாக இருந்தும் செயல்படுத்தவில்லை. மேலும், பஞ்சாப் ராஜஸ்தான் மாநிலங்கள் 2019-ல் தான் இந்த திட்டத்தில் இணைந்தனர். இதனால் திட்டம் செயல்படுத்த தாமதமானது. இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.