தேசிய அளவிலான ஊசூ தற்காப்புக் கலை போட்டியில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளை கோவை மாநகரக் காவல் ஆணையர் சுமித்சரண் பாராட்டினார். 
வெற்றிக் கொடி

தேசிய அளவிலான ‘ஊசூ’ தற்காப்புக் கலை போட்டிகளில் கோவை வீரர், வீராங்கனைகள் வெண்கலப் பதக்கம் வென்றனர்

செய்திப்பிரிவு

கோவை

தேசிய அளவிலான ஊசூ தற்காப்புக் கலை போட்டிகளில், கோவை வீரர், வீராங்கனைகள் வெண்கலப் பதக்கம் வென்றனர். அவர்களை கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் பாராட்டினார்.

இந்திய ஊசூ சம்மேளனம் சார்பில், 28-வது தேசிய சீனியர் ஊசூ சாம்பியன்ஷிப் போட்டி, ஊசூ சாம்பியன்ஷிப் போட்டித்தில் உள்ள ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவி பூரணி, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் கணேஷ்குமார், வீரர் ராபர்ட் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.

இதேபோல், கொல்கத்தா இந்திய விளையாட்டுக் குழுமம் (சாய்) சார்பில், மேற்கு வங்க மாநிலத்தில் 19-வது அகில இந்திய சப்-ஜூனியர் ஊசூ தற்காப்புக்கலை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட கோவை பாரதிய வித்யாபவன் பள்ளி மாணவி பால ஹர்ஷினி, சுகுணா பிப் பள்ளி மாணவி
வேதஸ்ருதி, கேஜி மெட்ரிக் பள்ளி மாணவர் கமலேஸ்வரன் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.

மேலும், இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் (எஸ்ஜிஎஃப்ஐ) சார்பில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தேசிய அளவிலான ஊசூ தற்காப்புக்கலை போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 1,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட கோவை கேகே வித்யாலயா பள்ளி மாணவி பூரண 65 கிலோ எடைப்பிரிவிலும், பேப்டிஸ்ட் அகாடமி மாணவர் நிமல்ஜித் சிங் 56 கிலோ எடைப்பிரிவிலும், பாரதி மெட்ரிக் பள்ளி மாணவர் செல்வம் 45 கிலோ எடைப்பிரிவிலும் வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.

காவல் ஆணையர் பாராட்டு தேசிய அளவிலான ஊசூ தற்காப்புக்கலை போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு கோவை மாநகரக் காவல் ஆணையர் சுமித்சரண், துணை ஆணையர் (குற்றப் பிரிவு) உமா, துணை ஆணையர் (போக்குவரத்து) முத்தரசு ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

தமிழ்நாடு ஊசூ பொதுச்செயலாளர் பி.ஜான்சன், கோவை மாவட்ட தலைவர் கணேசன், பயிற்சியாளர் அபுதாஹீர் ஆகியோர் உடன் இருந்தனர்.தேசிய அளவிலான ஊசூ தற்காப்புக் கலை போட்டியில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளை கோவை மாநகரக் காவல் ஆணையர் சுமித்சரண் பாராட்டினார்.

SCROLL FOR NEXT