வெற்றிக் கொடி

சிங்கத்திடம் சிக்கிய பிஹார் இளைஞர் உயிர் தப்பினார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் இருக்கும் வளாகத்தில் நேற்று மதியம் 12.30 மணிக்கு இளைஞர் ஒருவர் இறங்கினார்.
அப்போது, அவரது அருகே ஆண் சிங்கம் ஒன்று வந்தது. ஆனால், இளைஞரை சிங்கம் ஒன்றுமே செய்யவில்லை.இதனையறிந்த பூங்கா அதிகாரிகள் இளைஞரை எந்த காயமும் இல்லாமல் பத்திரமாக மீட்டு, போலீஸில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரெகன்கான் என்பது தெரியவந்தது.-பிடிஐ

SCROLL FOR NEXT