1. 8 என்ற எண்ணை எட்டு முறை பயன்படுத்தி 1,000 என்று விடையை கொண்டு வர வேண்டும். முடியுமா?
2. தொலைபேசியில் டயல் செய்வதற்காக காணப்படும் அனைத்து எண்களையும் பெருக்கினால் கிடைக்கும் விடை என்ன?
3. 4 5 6
21 51 81
7 8 9
12 42 ?
4. இரண்டு பாத்திரங்களில் தண்ணீர் வைத்திருந்தார்கள். ஒரு பாத்திரத்தில் 15 டிகிரி செல்சியஸிலும், மற்றொரு பாத்திரத்தில் 15 டிகிரி ஃபாரன்ஹீட்டிலும் இருந்தது. இரண்டு பாத்திரங்களிலும் ஒரே நேரத்தில் ஒரு காசைப் போட்டால் எந்தப் பாத்திரத்திலுள்ள காசு முதலில் பாத்திரத்தின் அடி பாகத்தைப் போய்ச் சேரும்?
விடைகள்
1. 888 + 88 + 8 + 8 + 8 = 1,000
2. 0 (காரணம் 0 என்ற எண்ணும் அதில் உள்ளது. எந்த எண்ணை 0 என்ற எண்ணினால் பெருக்கினாலும் விடை பூஜ்ஜியம்தான்).
3. மேல் வரிசை எண்ணுக்கும் கீழ் வரிசை எண்ணுக்கும் என்ன தொடர்பு என்பதைக் கண்டுபிடித்தால் கடைசி எண் என்ன என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். 3இல் பெருக்கி அதைத் தலைகீழாக எழுத வேண்டும். அப்படியானால் விடை 72.
4. 15 டிகிரி ஃபாரன்ஹீட் என்றால் அது ஐஸ்கட்டி. அதில் காசு போட்டால் மேலேதான் இருக்கும். ஆகையால் 15 டிகிரி செல்சியஸ் பாத்திரத்தில் போட்ட காசு தான் கீழே செல்லும்.