குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், விஸ்டாடோம் எனப்படும் கண்ணாடி பெட்டியில் இயற்கையை ரசித்தபடி சென்ற பயணிகள்.

 
சுற்றுலா

மதுரை – குருவாயூர் ரயிலில் கண்ணாடி பெட்டி அறிமுகம்: இயற்கை எழிலைக் கண்டு பயணிகள் உற்சாகம்

ஜனவரி மாதம் வரை முன்பதிவு முடிந்தது

செய்திப்பிரிவு

தென்காசி: மதுரையில் இருந்து தென்​காசி வழி​யாக குரு​வாயூர் செல்​லும் எக்ஸ்பிரஸ் ரயி​லில், விஸ்டாடோம் எனப்​படும் கண்​ணாடி பெட்டி நேற்று முதல் இணைக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு பயணிகள் மத்​தி​யில் பெரும் வரவேற்பு கிடைத்​துள்​ளது.

தென்​காசி​யில் இருந்து செங்​கோட்டை, புளியரை, ஆரியங்​காவு, புனலூர் உள்​ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்​பகுதி​கள் வழி​யாக இந்த ரயில் செல்​லும் வழி​யில் உள்ள பசுமைமாறாக் காடுகளை சுற்​றுலா பயணிகள் கண்டு ரசிக்​கும் வகை​யில், சோதனை ஓட்​ட​மாக ஒரே ஒரு விஸ்டாடோம் கண்​ணாடி பெட்டி இணைக்​கப்​பட்​டுள்​ளது.

ஏசி வசதி​யுடன் கூடிய இந்த கண்​ணாடி பெட்​டி​யில், பெரிய கண்​ணாடி ஜன்​னல்​கள், கண்​ணாடி கூரை மற்​றும் 360 டிகிரி சுழலும் இருக்​கைகளு​டன், மொத்​தம் 44 இருக்​கைகள் உள்​ளன. மேற்​குத் தொடர்ச்சி மலை​யின் அழகிய இயற்கை காட்​சிகளை ரசிக்க இது வழிவகை செய்​கிறது.

புளியரை முதல் ஆரியங்​காவு, கழுதுருட்டி, புனலூர் மற்​றும் கேரளாவின் பல்​வேறு பகுதி​கள் வழி​யாக இந்த ரயில் செல்​லும்​போது, இருபுறங்​களி​லும் காணப்​படும் பசுமையான மலைகள், இயற்கை எழில் கொஞ்​சும் பள்​ளத்​தாக்​கு​கள் உள்​ளிட்ட காட்​சிகளை ரசித்​த​படியே பயணிக்க முடியும். இத​னால் இந்​தப் புதிய ரயில் பெட்டி பயணிகள் மத்​தி​யில் பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

புதிய கண்​ணாடி பெட்​டி​யில் முதல் நாளி​லேயே முன்​ப​திவு செய்து தென்​காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார் பயணம் மேற்​கொண்​டார். புதிய ரயில் பயணம் குறித்து அவர் கூறுகை​யில், “விஸ்டாடோம் கண்​ணாடி பெட்டி பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்​றுள்​ளது. இயற்கை காட்​சிகளை ரசித்​த​படியே பயணம் செய்​வது மனதுக்கு இத​மாகவும், மகிழ்ச்​சி​யாகவும் உள்​ளது.

எதிர்​காலத்​தில் கண்​ணாடி பெட்​டிகளின் எண்​ணிக்​கையை அதி​கரிக்க ரயில்வே நிர்​வாகம் நட​வடிக்கை எடுக்​கும் என எதிர்​பார்க்​கிறேன்” என்று தெரி​வித்​தார். விஸ்டாடோம் கண்​ணாடி பெட்டி ரயில் சேவைக்கு, இரு மாநில மக்​களும் சிறப்​பான வரவேற்பு கொடுத்​துள்ள நிலை​யில், இப்​பெட்​டிக்​கான முன்​ப​திவு ஜனவரி மாதம் வரை நிறைவடைந்​துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT