சுற்றுலா

துலிப் மலர் திருவிழா தொடக்கம்: புகைப்படத்தை பகிர்ந்து காஷ்மீர் முதல்வர் உமர் பெருமிதம்

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்​மு-​காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா நேற்று சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

ஸ்ரீநகரில் உள்ள ஆசி​யா​வின் மிகப்​பெரிய துலிப் தோட்​டத்தை இன்று நேரில் பார்​வை​யிட்​டேன். மலர்​கள் முழு​மை​யாக மலர்வதற்கு இன்​னும் 7 முதல் 8 நாட்​கள் ஆகும். என்ற போதி​லும், தோட்டம் முழு​வதும் இப்​போதே வண்​ணமய​மாகக் காட்சியளிக்கிறது. தோட்​டக்​கலைத் துறை அதி​காரி​களின் மேற்பார்வை குழு​வினர் மிகச்​ சிறந்த பணியை மேற்கொண்டுள்ளனர். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

          

இது குறித்து காஷ்மீர் தோட்​டக்​கலைத் துறை இயக்​குநர் மதுாராமசூம் கூறுகை​யில், "இந்​திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் மார்ச் 16-ம் தேதி (இன்று முதல்) பொது​மக்​களுக்​காகத் திறக்​கப்​படும். இந்த ஆண்டு 70-க்​கும் மேற்​பட்ட வகை​களில் சாதனை அளவாக 18 லட்​சம் துலிப் மலர்​கள் நடவு செய்யப்பட்டுள்ளன. சுற்​றுலாப் பயணி​களின் வசதிக்​காக ஆன்லைன் மூலம் டிக்​கெட் முன்​ப​திவு செய்​யும் வசதி​யும் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது" என்​றார்.

இத்​தோட்​டத்​தில் துலிப் மலர்​கள் மட்​டுமின்றி டஃபோடில்​ஸ், ஹைசின்த்​தஸ், ரோஜாக்​கள் உள்​ளிட்ட பல்​வேறு மலர் வகைகளும் சுற்​றுலாப் பயணி​களைக் கவரும் வகை​யில் பூத்​துக்​ குலுங்​குகின்​றன.

SCROLL FOR NEXT